tamilnadu

img

அரசு விழாவில், 30,658 பயனாளிகளுக்கு ரூ.117,78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி

திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 30,658 பயனாளிகளுக்கு ரூ.117,78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  உடன் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம் -மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.