புதுதில்லி,ஜன.3- பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மருத்துவச்சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மருத்துவச்சேர்க்கையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவப்படிப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது
தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு நிர்ணயித்தது. அந்த குழு பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது சரியே என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த குழு தயாரித்துள்ள அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வழக்கு ஜனவரி 6 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே முதுகலை நீட் மருத்துவப்படிப்புக்கான அட்மிஷன் மற்றும் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.