சென்னை, அக்.12- தமிழக அரசு மற்றும் கோவை உயிர் அறக்கட்டளை இணைந்து மாண வர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் “குட்டி காவலர்” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளன. இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதனன்று (அக்.12) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாது காப்பு குறித்து கற்பித்து சாலைப் பாது காப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமா கும். சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப் புணர்வை பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரப்பும் வகையில், முதல்வர் தலைமை யில் 5,000 மாணவர்கள் கோவை கொடி சியா வர்த்தக மையத்திலும், 4.50 லட்சம் மாணவர்கள் கோவை மாவட்டத் திலுள்ள அந்தந்த பள்ளி வளாகத்தி லும் உறுதிமொழி எடுத்துக் கொண்ட னர்.
உறுதிமொழி
“நான் குட்டி காவலராகப் பொறுப் பேற்கிறேன். நான் எனது பயணத்தின் போது சாலை விதிகளைக் கவன மாகக் கடைப்பிடிப்பேன் என்றும், எனது உறவினர்களையும், நண்பர்களை யும் சாலை விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன் என்றும் உறுதி ஏற்கிறேன். ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங் கவோ கூடாது என்பதை அறிவேன். இரு சக்கர வாகனப் பயணத்தில் தலைக்க வசம் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனப் பயணத்தில் இருக்கைப்பட்டை அணிய வேண்டும் என்றும் உணர்த்துவேன். இந்தச் சாலை பாதுகாப்பு உறுதி மொழியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டு அதை உளமார பின்பற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்”. அதனைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பு குறித்த மாணவர் பயிற்சி கையேட்டினையும், ஆசிரியர் களுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி யில் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு, காவல்துறை தலைமை இயக்கு நர் செ. சைலேந்திர பாபு, உயிர் அறக் கட்டளை தலைவர் சஞ்ஜய் ெஜயவர் தனவேலு, நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன், அறங்காவ லர் ஜி. சவுந்தரராஜன், புரவலர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர் எஸ். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.