வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பேசிய பாஜக அமைச்சர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பேசிய மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் பபன்ராவ் லோனிகர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல், வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.கவை சேர்ந்த மாநில குடிநீர் வினியோகத் துறை அமைச்சர் பபன்ராவ் லோனிகர் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பார்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து விட்டதாகவும், இதனால் தேர்தலில் வெற்றி பெறுவதில் அவருக்கு எந்த சிக்கலும் இல்லை என பேசும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் பபன்ராவ் லோனிகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

;