tamilnadu

img

பள்ளிகளில் பொங்கல் விழா

தரங்கம்பாடி, ஜன.13- மயிலாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு வீட்டா வெர்சிட்டி பன்னாட்டு பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமன், கஜேந்திரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நிர்வாக குழு உறுப்பினர் கேதாரம் நடராஜன் வர வேற்றார். திரைப்பட நடிகர், பாடகர், ஆந்தக்குடி இளையராஜா கலந்து கொண்டு நாட்டுப்புற பாடல்கள் பாடியும், பொங்கல் பண்டிகை குறித்தும் சிறப்புரையாற்றினார்.  கரும்புகளை கொண்டு பிரமாண்ட அலங்கார வளைவு, ஏர் உழுதல், நாற்று நடுதல் உள்ளிட்ட விவசாய பணிகள் மேற்கொள்வது போல் அரங்கம் விழா மேடை தத்ரூப மாக அமைக்கப்பட்டது. மேலும் ரேக்ளா வண்டி, குதிரை வண்டி என அனைத்தும் ஜோடிக்கப்பட்ட நிலை யில் விழா மேடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது காண்போர் வியக்கும் வகையிலும் இருந்தது.

பெற்றோர்கள் குழுவாக சேர்ந்து பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என சத்தமிட்டும், குலவை சத்தம் எழுப்பி பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைக ளுக்கும் பெற்றோர்களுக்கும் உரி அடித்தல், கயிறு இழுத்தல், கும்மி அடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விழா வில் ஆங்கிலத்தின் தற்போதைய அவசியம் குறித்து ஆசிரியர் ஆரோக்கியசாமி, தமிழர் பாரம் பரியம் என்ற தலைப்பில் ஆசிரியர் வீரபாண்டியன் சிறப்புரையாற்றினர். விழாவில் மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் ஜனார்த்த னன், உதவி ஆளுநர் முருகேசன், ரோட்டரி சங்க இளங்கோவன், காமேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

குடவாசல்  

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள சீதக்கமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரி யர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவிற்கு தலைமையாசிரியர் சு.இராசேந்திரன் தலைமை தாங்கி னார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலசுப்ரமணியன், உதவித் தலைமையாசிரியர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக பாரம்பரிய நெல்வகை, மாட்டு இனங்கள், கீழடி தமிழர்களின் தாய்மடி உள்ளிட்ட தலைப்புகளில் ஆசிரியர்கள் பேசி னர். தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கோலம் மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. நிறைவாக பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர் சின்னை யன் நன்றி கூறினார்.

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரைக்குடி சாலையில் இயங்கி வரும் அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி நிறுவனர் டி.என்.எஸ்.நாகராஜன் தலைமை வகித்தார். லெட்சுமி நாச்சி யார், டி.என்.எஸ்.யோகராஜா, ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் இயற்கை விவசாயி சின்னையா, பள்ளி மாணவ, மாணவி கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழி யர்கள் கலந்து கொண்டனர். விழா வில் கோலப் போட்டி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், உள்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளி முதல்வர் நன்றி கூறினார். அறந்தாங்கி தாலுகா நாகுடி அரசு மாணவியர் விடுதியில் விடுதி காப்பாளர் சந்தானலட்சுமி தலைமை யில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் விடுதி மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிறு அன்று நடைபெற்றது. விழாவிற்கு ரமேஷ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நந்தலாலா, மாவட்ட செயலாளர் ரங்கராஜன், ஆசிரியை ஞானசெல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  விழாவில் விளையாட்டு, பேச்சு, பாட்டு, நடன போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ. மாணவிகளுக்கு பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும சான்றி தழ் வழங்கப்பட்டது. முன்னதாக கங்கை கருங்குயில்கள் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் தமுஎகசவினர், சிபிஎம் கட்சியினர், தோழமை சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் ரமேஷ் வர வேற்றார். சரவணன் நன்றி கூறினார்.

பொன்னமராவதி

புதுக்கோட்டை பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது. பள்ளி வளாகத்தில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழாவில் தனி அலுவலர் நெ.ராமசந்திரன், முதல்வர் வெ.முரு கேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  திராவிடர் கழகத்தின் சார்பில் பொன்னமராவதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழக மாநில துணைச் செயலாளர் ஆசைத்தம்பி ஒன்றிய  இளைஞரணி செயலாளர் மனோ கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பள்ளி முதல்வர் ச.ம.மரிய புஷ்பம் தொட்டியபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கீதாசோலையப்பன், முன்னாள் தலைவர் சோலையப்பன், கண்டியாநத்தம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகை: நாகை மாவட்டம், வேதா ரணியம் வட்டம், கருப்பம்புலம் ஞானாம்பிகா தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் ஒன்று கூடி, பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடி னர்.