பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான ஆங்கில மொழி திறன் வளர்த்தல் (2019–20) கல்வி ஆண்டிற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி வரவேற்றார். பள்ளி தாளாளர் டாக்டர் ராம்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மை குரு கண்சல்டன்சி நிர்வாகி செந்தில்குமார் பேசுகையில், மாணவ- மாணவிகள், 14 வயதிற்குள் தங்களின் ஆங்கில மொழி ஆளுமைத் திறனை தயக்கமின்றி புரிதலோடு வெளிக் கொண்டு வருவது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் தன்மைக்கேற்ப நிலைப்படுத்த வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் 14 வயதிற்கு பிறகு மிகுந்த சிரமம் எடுக்க வேண்டி வரும் என தெரிவித்தார். பின்னர் மாணவ மாணவிகள், தேசியக்கொடி பற்றியும், கல்வியின் முக்கியத்துவம், விவசாயத்தின் முக்கியத்துவம், சாலை போக்குவரத்து பற்றிய விளக்கவுரை, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு குறித்த 25 வகையான நேரடி நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் இரா.சிவக்குமார் மற்றும் பள்ளியின் பங்குதாரர்கள், பள்ளி துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், ஆசிரியைகள் ஹேமா, சந்திரோதயம் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.