வழக்கமான கோஷங்கள்
“இது வெறும் வழக்கமான விஷயங்களையும், கோஷங்களையும் கொண்ட நிதிநிலை அறிக்கை. மக்களின் துயரங்கள், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், கிராமப்புற மக்களின் வருமானத்தில் வீழ்ச்சி, விவசாய தற்கொலைகள் மற்றும் விலைவாசி விலையைத் தணிக்க உரிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை”
தந்திரம் மிக்க அறிவிப்புகள்
“இது வரலாற்றிலேயே நீண்டநேரம் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இருக்கலாம். ஆனால், இது ஒன்றுமே இல்லாத வெற்று நிதிநிலை அறிக்கை. நாடு சந்தித்து வரும் மிகப் பெரிய சவால் வேலைவாய்ப்பின்மை. ஆனால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எந்த கொள்கை ரீதியிலான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நான் இதில் தந்திரம் மிக்க அறிவிப்புகளை கண்டேனே தவிர நாடு முழுமைக்கும் பலனளிக்கும் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை”