ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

tamilnadu

img

தமிழ்நாடு அஞ்சல்துறையில் அஞ்சலர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்திடுக... மத்திய அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் கடிதம்

புதுதில்லி:
தமிழ்நாடு அஞ்சலகப் பிரிவில் 1033 காலியிடங்களுக்கான அஞ்சலர்(postman-mailguard) பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி, காலியிடங்களைப் பூர்த்தி செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன், மத்திய அமைச்சர்ரவி சங்கர் பிரசாத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் அஞ்சலர் பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக 2016 டிசம்பர் 11 அன்றுதேர்வு நடந்தது.  பின்னர் இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறிதேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. 1033காலிப் பணியிடங்கள் இருக்கின் றன. மேலும் அஞ்சல் உதவியாளர் பணியிடங்களும் பலர் ஓய்வுபெற்றதன் காரணமாகக் காலியாக இருக் கின்றன. இவ்வாறு ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதால் அவற்றின் வேலையை பணியிலிருப்போர் கூடுதலாக சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.எனவே தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு தேர்வுகள் நடத்தி, காலி பணியிடங்களைப் பூர்த்தி செய்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பி.ஆர். நடராஜன் எழுதியுள்ளார். (ந.நி.)

;