tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : மணிலால் காந்தி பிறந்தநாள்...

மணிலால் காந்தி 1892ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் ராஜ்கோட்டில் பிறந்தார்.

மணிலால் காந்தி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார்.  1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனியன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.மணிலால் காந்தி 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் நாள் மறைந்தார்.

===பெரணமல்லூர் சேகரன்===