புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டம், மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் இந்தப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தை ஆளும் பாஜக அமைச்சர்கள் நடமாட முடியவில்லை. காரில் செல்ல முடியவில்லை. ஹெலிகாப்டர்களிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் ‘கேலொ இந்தியா’ (Khelo India) விளையாட்டுப் போட்டியைத் துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி ஜனவரி 10-ஆம் தேதி கவுகாத்தி வரவுள்ளதாக வெளியான செய்தி, அம்மாநில மக்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. மோடியின் வருகைக்கு எதிராக அசாம் மக்கள் தற்போதே போராட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.இதையும் மீறி, பிரதமர் மோடி அசாம் வரும்பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் - கலவரம் வெடிக்கும் என்று அசாம் மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.