திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

வெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு

புதுதில்லி:
வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதா நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிதி முறைப்படுத்தும் சட்டம் 2010-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த மசோதா மக்களவையில் விவாதத்திற்கு பின்னர் செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது.குறிப்பிட்ட நபர்கள் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதை இந்த சட்டத்திருத்தம்தடை செய்கிறது. தேர்தல் வேட்பாளர், நீதிபதி, செய்தித்தாள் ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அரசு ஊழியர் உள்ளிட்டோர் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதை இந்த சட்டத்திருத்தம் தடை செய்கிறது. இந்த மசோதாவின் மீது பேசிய பல்வேறு கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டில் இருந்து பல்வேறு அமைப்புகள் நிதி பெற்று நல்ல காரியங்களுக்காக செலவளித்து வருவதால், கட்டுப்பாடுகள் காரணமாக பலர்வேலையை இழக்க கூடும் எனதெரிவித்தனர். இந்நிலையில் மாநிலங்களைவையில் அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன் பேசுகையில், “வெளிநாட்டு நிதி முறைப்படுத்த மசோதாவில் அரசின் எண்ணம் நல்ல உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் நடைமுறையில் தவறாக பயன்படுத்தப் பட வாய்ப்பு உள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாக செலவை குறைக்கும் முடிவு என்பது தேவையற்றது என்று தெரிவித்தார்.

;