வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

ஆந்திராவில் வேகமாக பரவும் கொரோனா... ஒரே நாளில் 3,693 பேருக்கு தொற்று...

அமராவதி
தமிழகத்தை போலவே ஆந்திராவிவிலும் கொரோனா பரவல் வேகம் உச்சத்தில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநில அரசு கூறினாலும், இன்னும் பரவல் வேகம் கட்டுக்குள் வரவில்லை. ஜெட் வேகத்தில் தான் பரவி வருகிறது. 

இந்நிலையில், ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3,693 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 44,609-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 21,763 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.    

;