tamilnadu

img

வெறுப்பு வைரசை பரப்பும் பாஜக

சோனியா காந்தி சாடல்

புதுதில்லி, மார்ச் 23- காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வியாழனன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:  பாஜகவால் பரப்பப்பட்ட “வகுப்புவாத வெறுப்பின் வைரஸ்”  - இப்படிக் கூறுவதற்காக நான் கவலை தெரிவிக்கிறேன் - இதை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட வேண்டும்.

கொரோனா வைரஸை நாம் ஒற்றுமையாக சமாளிக்கும்போது, பாஜக தொடர்ந்து வகுப்புவாத, வெறுப்பு வைரஸை பரப்புகிறது. இதனால் நமது சமூக நல்லிணக்கத் திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த சேதத்தை சரிசெய்ய நாம் கடு மையாக உழைக்க வேண்டியிருக் கும்.  பிரதமர் நரேந்திர மோடிக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளோம், கிரா மப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் துன்பத்தைத் தணிப்பதற்கான பல ஆலோசனைகளை வழங்கியுள் ளோம். துரதிர்ஷ்டவசமாக, அவை ஓரளவு மட்டுமே செயல்படுத்தப் பட்டுள்ளன. மத்திய அரசிடம் இரக்க மும், பெரிய மனமும், அக்கறையும் இல்லை என்பதை இது வெளிப்ப டையாகக் காட்டுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்வதால் விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமை யான கஷ்டங்களையும் துன்பங்க ளையும் எதிர்கொண்டுள்ளனர். “குறிப்பாக விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரம், உற்பத்தி நிறுவனங் கள் முற்றிலும் முடங்கியுள்ளதால் கோடிக்கணக்கானோரின் வாழ்வா தாரம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. 

மே 3-ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை எவ்வாறு சமாளிக்கப் படும் என்பது குறித்து மத்திய அர சுக்கு தெளிவான யோசனை இருப்ப தாகத் தெரியவில்லை. மே 3-ஆம் தேதிக்குப் பிறகு தற்போதைய நிலை தொடர்ந்தால் அது இன்னும் பேரழிவை ஏற்படுத்தும். முதல் கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார நட வடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. வேலையின்றி லட்சக்கணக்கா னோர் தவிக்கின்றனர். இந்த நெருக் கடியை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது 7,500 ரூபாயை வழங்க வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.