இந்தியாவின் முப்படைகளின் தலைமைத்தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் ராணுவம் விமானப்படை கப்பற்படை ஆகிய முப்படைகளுக்கு தலைமைத்தளபதியாக நியமிக்க மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதி வழங்கியது. தலைமைத் தளபதிக்கான ஓய்வு வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் சேவை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக செயல்படுவார். இந்நிலையில் தற்போது முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின்ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.