tamilnadu

img

கொரோனாவை தடுக்க மாட்டுக்கோமியம் குடித்த அகில பாரத இந்து மகா சபா  நிர்வாகிகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க மாட்டு கோமியத்தை அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் குடித்த செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
சீனாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து உலக நாடுகள் தங்கள் மக்களை பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் கோ கொரோனா கோ போன்ற காமடிகளை இந்துத்துவா அமைப்பினர்  தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கெரோனா வருவதை தடுக்க அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை அருந்தும் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.