இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தஇன்று சென்னைக்கு வர உள்ளனர்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று பிற்பகலில் சென்னை வர உள்ளனர். இந்தக் குழுவினர், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் புதனன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.