tamilnadu

புதுச்சேரியில் மியூசிக் தெரபி மையம்

புதுச்சேரி, மே 12-புதுச்சேரியில் மியூசிக்தெரபி மையம் அமைக்கப் படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கில் 54-வது கம்பன் விழா நடைபெற்றது. இதையொட்டி பின்னணி பாடகி சுசீலாவுக்கு நடந்தபாராட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், மியூசிக் தெரபிமூலம் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படுவது போல் புதுச்சேரியில் மியூசிக் தெரபிமையம் அமைக்க இசைஞானி இளையராஜா கேட்டுள்ளதாகவும், விரைவில் மியூசிக் மையம் அமைக்கப் படும் என்றும் தெரிவித்தார்.