tamilnadu

சூதாட்ட கிளப் நடத்த அனுமதிக்கக்கூடாது: புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, ஜனவரி. 1- காசினோ சூதாட்ட கிளப் நடத்துவதற்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கக் கூடாது  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பிர தேசச் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விதிமுறைகளுடன் காசினோ புதுவை யில் கொண்டுவரப்படும் என்று சில தினங்க ளுக்கு முன்பு முதலமைச்சர் அறிவிப்பு செய்தி ருந்தார். 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிறிய பகுதியான புதுச்சேரியில் சட்டத்திற்கு விரோதமான மதுபான விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை வெகு ஜோராக நடை பெற்று வருகிறது.  இது தவிர அரசு அனுமதியுடன் 500க்கும்  மேற்பட்ட மதுபான விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இத்தகைய மது  விற்பனை மூலமாக அரசுக்கு பல கோடி  ரூபாய் வருமானம் இலக்கு தீர்மானிக்கப் பட்டு வருவாய் பெறப்பட்டு வருகிறது.  மறுபக்கம், போதைக்கு அடிமையான பல  இளைஞர்கள் உடல்நல பாதிப்பு, திடீர் மர ணம் போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வரு கிறது. இந்தியாவில் இளம் விதவைகள் அதி கம் கொண்ட மாநிலமாக புதுச்சேரி உள்ளது.  அன்றாடம் சமூக குற்றங்கள் நடைபெறுவ தற்கு மது, கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை முக்கிய காரணமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதுச்சேரிக்கு சூதாட்டத்தை அடிப்படையாகக்கொண்ட கேசினோ திட்டம் கொண்டு வருவது புதுச்சேரிக்கு தேவைதானா என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அர சும், மாநில முதல்வரும் இதுபோன்ற திட்டங்  களை அறிவிக்கும் போது வெளிப்படைத் தன்மை ோடும், அரசியல் கட்சிகள், பொது மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். எனவே புதுச்சேரி மக்களுக்கு நன்மை பயக்காத, கலாச்சார பாதிப்புகளை உள்ளாக்குகிற கேசினோ திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜாங்கம்  வலியுறுத்தியிருக்கிறார்.

;