புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கோவிட்-9 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே குச்சிப்பாளையம் மற்றும் செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த 2 பேரும், அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அவருடைய மனைவி, குழந்தை மற்றும் தனியார் நிறுவன ஊழியருடன் தொடர்புடைய பண்டசோழநல்லூரை சேர்ந்த அவரது நண்பர் ஆகிய 4 பேரும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அபுதாபியில் இருந்து புதுச்சேரி திரும்பிய லாஸ்பேட்டையை சேர்ந்த தந்தை, மகன் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வில்லியனூர் பைபாஸ் பகுதியில் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.