tamilnadu

img

எழுத்தாளர் மு. சிவலிங்கம் மறைவு; சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல்!

சென்னை, பிப். 14 - எழுத்தாளர், மார்க்சிய நூல்களின் மொழிபெயர்ப்பாளர் தோழர் மு. சிவலிங்கம் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டி ருப்பதாவது: எழுத்தாளரும், மார்க்சிய நூல்களின் மொழி பெயர்ப்பாளருமான தோழர் மு.  சிவலிங்கம் சென்னையில் செவ்வா யன்று (13.02.2024) திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது. ஏராளமான மார்க்சிய தத்துவார்த்த நூல்களை எழுதியுள்ளதோடு, மார்க்ஸ் -ஏங்கெல்ஸ் தொகுப்பு உள்ளிட்ட மிக முக்கியமான தத்துவார்த்த நூல்களை மிக எளிமையான நடையில் தமிழில் மொழியாக்கம் செய்து வாசகர்களுக்கு அளித்ததில் அவரது பங்கு மிக முக்கிய மானதாகும். கணினி தமிழ் பயன்பாடு குறித்த நூல்கள், அறிவியல் நூல்கள் உள்ளிட்ட பல முக்கிய புத்தகங்களையும் எழுதியுள்ளதோடு, புதிய கலைச் சொற்களை உருவாக்குவதிலும் பங்காற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு கணினி பயன்பாட்டை எளிதாக அறிமுகம் செய்யும் வகையிலும் பல புத்தகங்களை எழுதியுள்ள தோழர் மு. சிவலிங்கத்தின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து  வாடும் அவரது துணைவியார், மகன் மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தின ருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தோழர் மு. சிவலிங்கம் மறைவிற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும் பத்தினருக்கும் நேரில் ஆறுதலையும் தெரிவித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். பத்ரி, வெ. ராஜசேக ரன், க. நாகராஜன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச. லெனின் ஆகி யோர் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

;