தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் மின்சார சட்டம் 2020 திரும்பப் பெறக் கோரியும், கொரோனா காலம் முடியும் வரை மாதம் ரூ. 7500 விதம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியும் சிஐடியு சார்பில் புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு பிரதேச தலைவர் கே. முருகன் தலைமையில் நிர்வாகிகள் சீனிவாசன், பிரபுராஜ், மதிவாணன், மது, ஜீவானந்தம் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.