tamilnadu

img

தியாகி சண்முகம் நினைவு ஜோதி

புதுக்கோட்டை, ஜன.21- சிஐடியு அகில இந்திய மாநாட்டையொட்டி கீழ வெண்மணி யிலிருந்து புறப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதி செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை வந்தடைந்தது. அத னையொட்டி நமணசமுத்திரம் பஞ்சாலை தியாகி சண்முகம் நினை வாக துணை ஜோதி அதனுடன் இணைந்து புறப்பட்டது.  நமணசமுத்திரம் தியாகி சண் முகம் நினைவிடத்திலிருந்து புறப்பட்ட ஜோதி பயணத்திற்கு தையல் தொழிலாளர் சங்ச மாவட்டப் பொதுச் செயலாளர் சி.மாரிக் கண்ணு தலைமை வகித்தார். விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் ஜோதி யை எடுத்துக் கொடுக்க சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா பெற்றுக் கொண்டார். நிர்வாகிகள் கே.வெள்ளைச்சாமி, எம்.மூர்த்தி, ஆர்.முத்து உள்ளிட் டோர் பங்கேற்றனர்.