tamilnadu

img

பாஜகவை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.... ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேட்டி....

புதுக்கோட்டை:
தமிழக மக்கள் ஒருபோதும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்கமாட்டார்கள் என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். 

புதுக்கோட்டையை அடுத்து கடியாபட்டியில் புதன்கிழமை அவர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:

நடிகர் ரஜினி தனதுஉடல்சார்ந்த பிரச்சனை களால் அரசியலுக்கு வராமல் தவிர்க்கும் முடிவை எடுத்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் இதை நான் ஆதரிக்கிறேன். பலரும் ரஜினியிடம் ஆதரவு கேட்கும்போது எனது நெருங்கிய நண்பரிடம் நான் கேட்பதில் என்னதவறு இருக்கிறது. சென்னை சென்ற பிறகு இதுகுறித்துஅவரிடம் பேசுவேன். நாங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் எனது தலைமையிலேயே ஆட்சி அமைக்க வேண்டுமென எனது கட்சியினர் விரும்பு
கின்றனர். அதுவே எனது முடிவும். 

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் மிகவும் முக்கியமானது. இந்தப் பிரச்சனையில் பிரதமர் மோடி பாராமுகமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களை உடனடியாக அழைத்துப் பேசி உரிய தீர்வு காணப்பட வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதாகட்சியின் ஆட்சி அமையக்கூடாது என மக்கள் விரும்புகின்றனர். அக்கட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

திராவிடம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அது மொஹஞ்சதாரோ, ஹரப்பா காலம் தொட்டு உள்ளது. நானும் திராவிடன்தான். எனது அரசியலும் திராவிட அரசியல்தான். ஜனவரியில் கூட்டணி குறித்து அறிவிப்பேன். ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ள வில்லை என்பதாலேயே நான் ஆன்மீகத்திற்கு எதிரானவன் அல்ல. அதே நேரத்தில்என்னை ஆன்மீக வழியில்அரசியல் செய்ய வேண்டு மென யாரும் நிர்பந்திக்க முடியாது.ஒரு உயிருக்கு மற்றொருஉயிரை எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். மரணதண்டனையால் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு ஆண்களும், பெண்களும் சமம் என்ற நிலையை சமூகத்தில் உருவாக்க வேண்டும்.இவ்வாறு கமல்ஹாசன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.