tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரணி

அறந்தாங்கி, ஜன.20- புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அனைத்து கட்சி சார்பாக கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பேரணி, கோபாலப்பட்டி னம் ப்பட்டினம் பகுதி யிலிருந்து தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து மீமிசல் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பின்னர் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மே17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி, அய்யாவழி பாலமுருகன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரிப், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கண்டன உரையாற்றினர். பேரணியில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.