திமுக-காங்கிரஸ் எதிர்ப்பு
சென்னை, ஜன.9- மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா எதிர்க் கட்சிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழக சட்டப் பேர வையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், வழக்க மான சட்டமாக இயற்றுவதற்கான மசோ தாவை தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட் சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்து பேசுகையில், “நேரடி தேர்தல் முறையில், மேயர்கள் உள்ளிட்டோர் குறிப் பிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் பெரும்பாலான உறுப்பினர்கள் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கும் போது மன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற முடிவதில்லை என்றும் தேர்தல் மறை முகமாக நடத்தப்பட்டால், மேயர்கள் உள் ளிட்டோரின் நிலைத்தன்மை மற்றும் கூட்டுப் பொறுப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனை அறிமுக நிலையிலேயே எதிர்த்த திமுக உறுப்பினர் மா. சுப்பிர மணியன், பின்னர் விவாதத்தின்போது பேசுகை யில்,“அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு வரைக்கும் நேரடித் தேர்தல் நடத்தப்ப டும் என்று ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் விருப்ப மனுக்களையும் பெற்றோம். முத லமைச்சரும் அப்படித்தான் தெரிவித்தார். ஆனால், அவசர அவசரமாக நடந்த அமைச்ச ரவைக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல் வரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, அப்படியா? எனக்கு தகவல் தெரிந்தால் உங்களுக்கு சொல்கிறேன் என்கி றார். அடுத்த அரை மணி நேரத்தில் மறை முகத் தேர்தல் என்று அறிவிப்பு வெளி யாகிறது. இதனால் மக்கள் குழப்பம டைந்தனர். எல்லைகளும் முறையாக வரை யறை செய்யப்படவில்லை. எனவே, இந்த சட்டத் திருத்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், “மக்கள் தொகை அடிப்படையில்தான் எல்லைகள் வரையறை செய்யப்பட்டது. அர சின் கொள்கை முடிவு பல்வேறு நேரங்க ளில் மாறுவது சகஜம்தான் என்றார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவி காலத்தை 7வது முறையாக நீட்டிப்பு செய்தற்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலத்தில் மூன்றாம் நிலை நகராட்சி என்பது எதுவும் இல்லை என்று வேலூர் மாவட்டம் மேல் விசாரம் மூன்றாம் நிலை நக ராட்சியை 2 ஆம் நிலையாக தரம் உயர்த்தும் மசோதாவையும் திமுக கடுமையாக எதிர்த்தது. உள்ளாட்சித்துறை அமைச்சரின் விளக்கத்தை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.