tamilnadu

img

தொழிலாளர் நலவாரிய பதிவு ஆன்லைனில் துவக்கம்

சேலம், ஜூலை 20- சேலம் சிஐடியு அலுவலகத்தில் தொழிலா ளர் நலவாரிய பதிவு ஆன்லைன் மூலம் செய்யும் பணி திங்களன்று துவங்கியது. தொழிலாளர் நலவாரியத்தில் தொழிலா ளர்கள் பதிவு செய்ய இனி நலவாரிய அலுவலகம் செல்ல தேவையில்லை. அதற்கு  மாற்றாக ஆன்லைனில் பதிவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன டிப்படையில் சேலம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகமான வி.பி.சிந்தன் நினைவகத்தில் தொழிலாளர்களுக்கு ஆன்லைனில் பதிவு  செய்யும் பணி திங்களன்று துவங்கி யது. இந்நிகழ்வினை, சிஐடியு மாவட்டச்  செயலாளர் டி.உதயகுமார் துவக்கி வைத் தார். இதில் துணைச் செயலாளர் எ.கோவிந்தன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சுரேஷ்குமார், சரவணன், வேலுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.