சென்னை,ஜன.2- புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை தினங்களில் ரூ.450 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது போல் இந்த ஆண்டும் மது விற்பனை அதிகமாகியுள்ளது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை நாட்களில் மது விற்பனை அதிக ரிக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்த டாஸ்மாக் நிறுவனம் தேவையான அளவு மது பெட்டிகளை கடைகளில் வைத்துள்ளது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய 2 நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.100 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. கடந்த ஆண்டு 300 கோடிக்குதான் விற்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 450 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.