த.மு.எ.க.ச. அறம் கிளையும் செம்பவளம் ஆய்வுத்தளமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 3 நாள் தொல்தமிழ் எழுத்துப் பயிற்சி முகாம் சென்னையில் புதனன்று (செப். 4) தொடங்கியது. இந்த விழாவில் கணினிப் பொறியாளர் முருகவேல் உருவாக்கியுள்ள, கணினியில் தட்டச்சு செய்யத்தக்க “ செந்தீ பிராமி எழுத்துரு” வெளியிடப்பட்டது. இதில் செந்தீ நடராஜன், அ.கா.பெருமாள், அனந்த நாராயணன் , மயிலைபாலு , முருகவேல் , உமர் ஃபரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.