உதகை,ஜன.21- உதகை ரோஜா பூங்காவில் வறட்சியான காலங்களில் நுழைவு கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா பூங்காவில் பல வகையான வண்ண ரோஜாபூக்கள் பூத்துக்குலுங்கும். இதனை கண்டு ரசிப்பதற்கு வெளிநாட்டில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்று லாப் பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் தற்போது பூங்காவில் மே மாதத்தில் நடைபெறவுள்ள ரோஜா மலர் கண்காட்சிக்காக நடவு பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேலும் கடும் உறை பனி ஏற்பட்டு பூக்கள் கருகியும், இதழ்கள் உதிர்ந்தும் பொழிவின்றி காணப்படுகிறது. இங்குள்ள செயற்கை நீரூற்றுகளிலும் தண்ணீர் ஏதுமின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகிறார்கள். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது செடிக ளில் பூக்கள் இல்லாமல் வறட்சி நிழவும் இதுபோன்ற காலங்களில் நுழைவு கட்டணம் வசூல் செய்வதை சுற் றுலாத் துறையினர் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.