tamilnadu

நீலகிரி , ஈரோடு, கோவை முக்கிய செய்திகள்

வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

உதகை, ஜன. 21- நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2019-20க்கான கடன் திட்ட அறிக்கையை திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட வங்கியின் உதவி பொது மேலாளர் ராஜன்பாபு பெற்றுகொண் டார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது, நீலகிரி  மாவட்ட முன்னோடி வங்கியின் கடன் திட்ட  அறிக்கை கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண் டில் ரூ.343 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத் திற்கான மொத்த முன்னுரிமை கடனாக  ரூ.3475 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு  ரூ.2475 கோடி, சிறுகுறு நடுத்தர தொழில்கள்  மேம்பாட்டுக்கு ரூ.441 கோடி, பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.559 கோடி, ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் விவசாயம் சார்ந்த தொழில் களுக்கு ரூ.2250 கோடியும், சிறுகுறு நடுத்தர தொழில்கள் துறை மேம்பாட்டுக்கு ரூ.421 கோடி யும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.461 கோடி என  ரூ.3132 கோடி ரூபாய் ஒதுக்கபட்டிருந்தது.இந்நி லையில் கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு  கடன் இலக்கில் 10.95 சதவீதம் அதிகரிக் கப்பட்டுள்ளது எனறார். இந்நிகழ்வில், முன்னோடி வங்கி மண்டல மேலா ளர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ராஜன்பாபு, மாநில ஊரக வாழ்வா தார திட்ட இயக்குநர் மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாற்றுதிறனாளிகளின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

உதகை, ஜன.21- நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கள் பயன்பெறும் வகையில் வருகின்ற ஜன.23 ஆம் தேதி (வியாழன்) சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகின்ற ஜன. 23 ஆம்  தேதி காலை 10 அளவில் மாற்றுதிறனாளிக் களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்  நடைபெறவுள்ளது. இம்முகாமில் மாற்றுதிறனா ளிக்களுக்கான அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கப்படவுள்ளது.  மேலும் இம்முகாமில் மாற்றுதிறனாளிகள்  தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை  மனுக்களாக அளித்து பயன் பெறலாம். இவ்வாறு  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

உதகை, ஜன.21- நீலகிரி மாவட்ட்த்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, நீலகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் சிறப்பாக செயல் படும் பொருட்டு எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜன.30 ஆம்  தேதியன்று மாலை 3 அளவில் நடைபெற வுள்ளது. இக்கூட்டமானது மாவட்ட வருவாய்  அலுவலர் தலைமையில் குன்னூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத் தில் எண்ணெய் நிறுவன பிரநிதிகள், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆகவே எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவித்தும், அதனை நிவர்த்தி செய்து பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசுத்துறைப் பணியாளர்களுக்கான மாநில அளவு விளையாட்டு போட்டி

கோவை, ஜன.21- அரசுத்துறைப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான மேசைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரவிசந்தி ரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ள தாவது, 2019-20 ஆம் ஆண்டிற்கான அரசு பணியாளர்களுக்கு மேசைப்பந்தாட்ட (table tennis) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது வருகின்ற பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி, மதியம் 3  மணி அளவில் சென்னை நேரு விளையாட்டு  அரங்கத்தில் நடைபெறுகிறது.  மேலும் இதில் தேர்வு செய்யப்படும் அரசு பணியா ளர்கள் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து  அரசுத் துறைப்பணியாளர்களும் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் விளையாட்டு போட் டியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஈரோடு,ஜன 21- சித்தோடு பகுதியில் கணவன் மனைவிக்கு ஏற் பட்ட குடும்பத்தகராறில் பெண் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள  செல்லப்பம்பாளையம், கருப்புராயன் கோவில்  வீதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் கூலி  தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 30).  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  இந்நிலை யில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி  குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் செவ்வாயன்று காலை மீண்டும் தமிழரசனுக்கும் பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனவேதனை அடைந்த பிரியா வீட்டில் தூக்கியிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.