நீலகிரி. ஜன.23- கூடலூர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூ ரில் நீதித்துறை நடுவர் நீதிமன் றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட மற்றும் கூடுதல் உரிமையியல் நீதி மன்றங்கள் உள்ளன. அதேபோல் பந்தலூர் பகுதியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றும் உள் ளது.ஆனால் இந்த நீதிமன்றங்க ளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக் கும் மேலாக நீதிபதிக்கான பணியி டங்கள் காலியாக உள்ளது. இத னால் நீதிமன்ற பணிகள் பாதிக் கப்பட்டு வழக்கு விசாரணை நடை பெறுவது குறைந்துள்ளது. இதன் காரணாமாக பொதுமக்கள் பெரி தும் பாதிப்படைந்துவந்தனர். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும், பலகட்டப் போராட் டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நீதிமன்றங் களில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூடலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் ஜன.20 (திங்கட்கிழமை) முதல் ஜன.22 ஆம் தேதி (புதன்கிழமை) வரை மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து புதனன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் வழக்கறி ஞர்கள் நீதிமன்றத்தை புறக்க ணித்து ஆதரவு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வரு கின்ற ஜன.27 ஆம் தேதியன்று (திங்கட்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேச்சு வார்த்தை நடத்திட அழைத்ததை அடுத்து போராட்டத்தை தற்கா லிகமாக ஒத்தி வைப்பதாக வழக்க றிஞர் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால் மூன்று நாட்களாக நடை பெற்று வந்த வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் புத னன்று தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பி.ஏ.வர்கீஸ் தலைமை வகித்தார். செயலாளர் சைனர்பாபு முன்னிலை வகித்தார். அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தின் தமிழ் மாநில குழு உறுப்பினர் ஏ.சி சாக்கோ துவக்கி வைத்து பேசி னார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் துணைச் செயலாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கூடலூர் இடைக்கமிட்டி செய லாளர் எம்.ஏ.குஞ்ஞி முகமது, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் அம்சா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.