நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் , இந்த சம்பவத்தில் கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி பயன்படுத்திய செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கி மற்றும் ரைபில் ரக துப்பாக்கிகளை கடுமையான துப்பாக்கிகளுக்கான விதிகளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.