சென்னை, நவ. 29- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய முதன்மை நிதித்துறை அதிகாரியாக புவன் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தப் பொறுப்பை டிசம்பர் 1 ஆம் தேதி ஏற்றுக் கொள்வார். இவர் இது வரை இந்த வங்கியின் பொது மேலாளராக பணியாற்றியதுடன் வரவு-செலவு மேலாண் மைத் துறையையும் கவனித்து வந்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளராகவும், வரவு-செலவு மேலாண்மைத் துறை பொறுப்பாளராக வும் மற்றும் முதன்மை நிதித்துறை அதிகாரி யாகவும் இருந்த ராதா வெங்கடகிருஷ்ணன் நவம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய முதன்மை நிதித்துறை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள புவன் சந்திரா, ஜி.பி.பந்த் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளநிலைப் பட்டமும், விரிவாக்கம் தொலை தொடர்புத்துறையில் பட்ட மேற் படிப்பும் பயின்றவர் என்று வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.