tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு- மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு

நாமக்கல், ஏப்.4-

நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு, நடவடிக்கை குழு கூட்டம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தொமுச அலுவலகத்தில் எல்பிஎப் மாவட்டசெயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், ஆண்டுக்கு இரண்டு கோடிபேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவோம் என மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், ஐந்து ஆண்டுகளில் 1.1 கோடிக்கு மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். தொழிலாளர் சட்டத் திருத்தம் என்ற பெயரால் 44 வகையான சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்குவது மோட்டார் வாகன சட்டத் திருத்தம், மின்சார ஒழுங்குமுறை சட்டம் போன்ற தொழிலாளர் விரோத சட்டங்கள், ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை அமலாக்கிய மத்திய பாஜக அரசை கண்டித்தும்.மேலும், வேலைத்தளங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் பெருகி வருகின்றன. விசாகா கமிட்டி பரிந்துரைகள் அமலாகவில்லை, பெண் உழைப்பாளிகளின் வேலை நேரம், சமூக பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும். சிறு,குறு, நடுத்தரஉரிமையாளர்கள் பல லட்சக்கணக்கான தொழிற்சாலையில் இழுத்து மூடப்பட்டன. ஆகவே நாடாளுமன்ற தேர்தலில் சமூக பொருளாதார மக்களின் வாழ்க்கையில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு அரசாங்கத்தை உருவாக்கிட நாமக்கல் நாடாளுமன்ற மதர்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவது, அவரை வெற்றி பெறச் செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.தனசேகரன், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் பழனிவேல், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஐயப்பன், தொமுச மாவட்ட நிர்வாகிகள் முத்துசாமி, சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;