நாமக்கல், ஆக.4- தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசு கடைகள் வைப்பதற்கு விண் ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது, அக்டோபர் 27 ஆம் தேதி தீபா வளிப் பண்டிகை கொண்டாடப்ப டுகிறது. அதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் ஆக.1 முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ - சேவை, பொது சேவை மையங்க ளில் இணையதளம் வாயிலாக விண் ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்து டன் கட்டட அமைவிட வரைபடம் விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு அள விலான இரண்டு புகைப்படங்கள், முகவரி குறித்த ஆவணம் (பான் அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் குடும்ப அட்டை), உரிமக் கட்டணம் ரூ. 500-ஐ, “0070-Other Administrative Services-60-Other Services-103-Receipts under Explosives Act D.P.Code.0070-60-103-AA-0004’ என்ற தலைப்பில் அரசு கருவூல சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும். அதை செலுத்தி யதற்கான சீட்டு (சலான் அசல்), உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சொந்தக் கட்டடம் என்றால் பட்டா, வாடகை கட்டடம் என்றால் ஒப்பந்தப்பத்திரம் மற்றும் ஆவணங்கள் (அசல் மற்றும் 5 நகல்கள்) உள்ளிட்டவற்றை இணைத்து, ஆக.31 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்க வேண்டும். அதன்பின் பெறப்ப டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள் ளப்படமாட்டாது. (விண்ணப்பக் கட் டணம் தனியாக ரூ.500 செலுத்த வேண் டும்). விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்துவிட்டு, 6 நகல் களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளிக்க வேண்டும். தற்காலிகப் பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாது காப்பான இடத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விபத்து இல்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை அனைவரும் கொண் டாட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.