tamilnadu

img

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 


நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.44 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.