tamilnadu

img

கொள்ளிடம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

 சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் 11 ஆவது வார்டுக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பானு சேகரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், தி.மு.க மாவட்டச் செயலாளர் நிவேதாமுருகன் ஆகியோர் கொள்ளிடம் கடைவீதியில் வாக்கு சேகரித்தனர். மேலும் தி.மு.க தோழமை கட்சி வேட்பாளர்களுக்கும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், கொள்ளிடம் ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்ல சேதுரவிக்குமார், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் படேல், மேற்கு வட்டாரத் தலைவர் ஞானசம்மந்தம் மற்றும் தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

;