tamilnadu

img

மத நல்லிணக்க கருத்தரங்கம்

தரங்கம்பாடி, நவ.19- நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் செவ்வாயன்று நடைபெற்றது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி நடை பெற்ற கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வ.பழனிவேலு தலைமை வகித்தார். அனைத்து ஓய்வூதி யர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சா.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.இராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். “மீண்டும் வேண்டும் மகாத்மா” -என்ற தலைப்பில் மாநிலத் துணைத் தலைவர் கோ.சுந்தரமூர்த்தி, “மதங்க ளும் மனித நேயமும்” என்ற தலைப்பில் முன்னாள் மாநில துணைத்தலைவர் து.கணேசன், “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு “ என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் அமைப்பாளர் என்.திருவேங்கடம், “தேசப்பிதா மகாத்மா” என்ற தலைப்பில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் மா.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.