tamilnadu

img

ஜன.8 பொது வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் பங்கேற்கிறது

நாகப்பட்டினம், ஜன.6- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழுக் கூட்டம், சனிக்கிழமை மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், மகாராஷ்டிரா மாநி லம் புனேயில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசியப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், ஜனவரி-8 நடை பெறவிருக்கும் அகில இந்திய வேலை நிறுத்த முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்கிக் கூறினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் அனைத்துச் சங்க போராட்டக்குழு முடிவின்படி நாடு முழுவதும் செயல்படும் மத்தியத் தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத் துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத் தில் நாகை மாவட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அரசு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் மு.பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ப.அந்து வன்சேரல் நன்றி கூறினார்.