tamilnadu

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதியில் கே. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு

சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவிவசாய நிலங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், வேட்டங்குடி, திருமுல்லை வாசல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கே.பாலகிருஷ்ணன் ஆய்வுசெய்தார். அப்போது விவசாயிகள் மனுஅளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியது:

கொள்ளிடம் பகுதியில் மழை வெள்ளத்தால் அதிக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடும்ப அட்டைக்குதலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.வாழை, சவுக்கு போன்றவற்றிற்கு உரியநிவாரணம் வழங்க வேண்டும். 30 ஆண்டு களுக்கு மேலாக எம்ஜிஆர் ஆட்சியின் போது கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை உடனடியாக இடித்து அகற்றி விட்டு புதிய கான்கிரீட் வீடு அரசு கட்டித்தர வேண்டும். 

சீர்காழி பகுதி சட்டநாதபுரம் ஊராட்சியில் சூரக்காடு கிராமத்தில் ஆய்வு செய்தபோது உப்பனாறுக்கு அருகில்  உள்ள கிராமங்களில் மழைநீர் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் எனவே உப்பனாற்றின் கரையை மேம்படுத்தி சிமெண்ட் கான்கிரீட் மதில்சுவர் கட்டித் தரவேண்டும். இவ்வாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வலியுறுத்தினார்.ஆய்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை தலைவர் வாஞ்சிநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். துரைராஜ், சீர்காழி வட்ட செயலாளர் சி. வி.ஆர். ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி. சிங்காரவேலன், பி.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.கேசவன்,டி.துரைக்கண்ணு, வி.ச. வட்டதலைவர் கே.ஜெகதீசன், வழக்கறிஞர் எஸ். ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;