tamilnadu

img

மயிலாடுதுறையில் அரசு பள்ளி பாடப் புத்தகங்களை எடை கடையில் போட்ட கல்வித்துறை?... சிபிஎம் கண்டனம்

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நடப்பு கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி பாடப்புத்தகங்கள் பழைய இரும்புக் கடையில் டன் கணக்கில் எடைக்கு போட் டுள்ள அவலம் அரங்கேறியுள்ளது. 

மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் உள்ள இரும்பு கடை ஒன்றில் 3 டாடா ஏசி வாகனம் மூலம் சிலநபர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக தகவலறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.அமுல்காஸ்ட்ரோ, மாவட்ட தலைவர் பி.மாரியப்பன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஐயப்பன், குமரேசன், கவியரசன், மாவட்ட குழு உறுப்பினர் கள் ஆர்.ரவீந்திரன், டி.துரைக்கண்ணு, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் டி.ஜி.ரவி ஆகியோர் உடனடியாக சென்று பார்வையிட்டு மாவவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின்மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கூறுகையில், “அனைத்து பள்ளிகளுக் கும் விநியோகித்து விட்டதாக கல்வித்துறையினர் கூறுகின்றனர். பள்ளிகளிலிருந்து கட்டுக்கட்டாக மொத்தமாக இதுபோன்று கடைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. பாடநூல் குடோன்களிலிருந்தே புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் எடைக்கு போட்டுள்ளனரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப் புத்தகத்தை கொரோனா காலத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு வழங்காமல் காசுக்காக பழைய இரும்பு கடையில் போட்டுள்ள நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். கல்வி மாவட்டம்முழுவதும் உள்ள பழைய இரும்பு கடைகளில் ஆய்வு செய்தால் தான் தெரியவரும். உடனடியாக தமிழக அரசு உரியநபர்கள் மீதும் கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பழைய இரும்பு கடையில் பாடப் புத்தகங்கள் எடைக்கு போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
யிருக்கிறது.

;