tamilnadu

img

காந்திஜி 150 சிறப்பு கருத்தரங்கம்

 சீர்காழி, டிச.24- நாகை மாவட்டம் சீர் காழியில், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில் காந்திஜி 150 என்ற தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் தமுஎகச சீர்காழி வட்ட தலை வர் எஸ்.எல். ஸ்ரீதர் தலை மையில் நடைபெற்றது.  இதில் அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு என்ற பாடலுக்கு சொந்தக்காரரான கவிஞர் கதிரை நீலமேகம் அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு என்ற பாடலுக்கு பதில் கடிதம் எழுதி பாடி, இசையமைத்து அந்த பாடலுக்கு குறும்படம் ஒன்று தயாரித்து அதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநில துணைப் பொதுச் செயளாலர் களப் பிரன் வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நாகை மாவட்ட செயளாலர் பி.பால சுந்தரம், செம்மலர் வீர சேனன், நந்த. இராஜேந்தி ரன், குறும்படத்தில் நடித்த  நடிகர்கள் மற்றும் தமுஎகச உறுப்பினர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.