நாகப்பட்டினம், மே 11- நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல், வடகால் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த 87 பேர், கேரள மாநிலம் பாலக் காட்டில் தங்கி கடந்த 6 மாத மாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு கார ணமாக வேலை இல்லாமல் பசிப் பட்டினியுடன் சொந்த ஊருக்குத் திரும்ப முடியா மல் தவித்தனர். இதுகுறித்து கேரள அரசுக்கும், நாகை ஆட்சியருக்கும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கேரள அரசு, உணவு மற்றும் அத்தி யாவசிய உதவிகளை அளித்து 3 பேருந்துகளில் 87 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள், சனிக் கிழமை அன்று மயிலாடு துறை வந்தனர். அவர்களு க்கு, மயிலாடுதுறை அரசு மரு த்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சைக்குப் பின் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் படுவர்.