tamilnadu

img

பொறையாரில் ஒரு ‘நூலகத் தந்தை’ : வீட்டை நூலகமாக மாற்றிய கல்லூரி முதல்வர்

தரங்கம்பாடி, ஜன. 12- “பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் வீட்டிலேயே முடங்கி விடாமல் ஒரு  நூலகத்தையே உருவாக்கி புத்தகங் களோடு வாழ்கிறார் அருள் மரியநாதன் என்கிற ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர்.” நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி யை அடுத்த பொறையார் தென்றல் நகரில் வசித்து வருபவர் அருள் மரியநாதன். அதே பகுதியில் உள்ள த.பே.மா.லு கல்லூரியில் 17 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர், பின்னர் முதல்வராக பல ஆண்டுகாலம் திறம்பட செயல்பட்டவர். 15 வயதிலேயே புத்தக வாசிப்பை தொடங்கியவர்.  தனது தந்தையின் வழி காட்டுதலால் புத்தக வாசிப்பை தொடங்கி தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில்  20 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களை வாங்கி குவித்துள்ளதோடு, பெரும்பாலான நூல்களை படித்துவிட்டேன் என்கிறார் மரியநாதன். கம்யூனிசம், பெரியாரியம், காந்தி யம், உலக அளவிலான புகழ்பெற்ற  நாவல்கள், இலக்கியம், கவிதைகள், வரலாறு, இலக்கணம் என அவரிடம் இல்லாத புத்தகங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு வீடு முழுவதும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. அரசுப் பணி தேர்வுகளுக்கான அனைத்து வகையான புத்தகங்கள், கையேடுகள், ஆராய்ச்சி மாணவர் களுக்கான நூல்கள், கிறிஸ்தவ, இஸ்லாம், புத்தம், இந்து, சீக்கியம் உள் ளிட்ட மத நூல்கள், மாத, வார இதழ்கள், தினசரி நாளிதழ் என மிகப்பெரிய நூலக மாக தனது வீட்டை அமைத்துள்ளார். தனது மனைவி இறந்து விட்ட பிறகும் சோர்வின்றி புத்தகங்களை படித்துக் கொண்டே இருக்கும் அருள் மரிய நாதன், புத்தகங்கள் மீதான ஆர்வம்  குறித்து விவரித்த போது, “சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பது தொற்றிக் கொண்டது. என்னிடம் உள்ள புத்தகங் கள் வெறும் அலமாரிகளை அலங்கரிப்ப தற்காக அல்ல, இளைஞர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்துவதற் காகவே எனது ஊதியத்தில் கணிச மான பகுதியை புத்தகங்கள் வாங்கு வதற்காகவே பயன்படுத்திக் கொள்வேன்! என் மனைவியும் என்னைப் போன்றே புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். எங்கள் வீட்டின் கதவுகள் எப்போதுமே திறந்தே இருக்கும். மாணவர்கள், இளைஞர்கள், புத்தகம் வாசித்தலில் ஆர்வமுடையவர்கள் வந்து படித்து செல்லலாம் என்றார் சிரிப்புடன். அருள்மரியநாதனின் ஒரு மகன், ஒரு மகள் படித்து முடித்து நல்ல வேலை யில் உள்ளனர். பேச்சுக்குப் பேச்சு திருக்குறளை மேற்கோள் காட்டும் மரியநாதன் 7-வது படிக்கும் போதே 1330 திருக்குறளை முழுமையாக மனப்பாடம் செய்து கொண்ட வர். உலக நாடுகளின் கரன்சிகள், நாண யங்கள், அஞ்சல் தலைகள், உறைகள் என 2 லட்சத்துக்கும் அதிகமாக சேக ரித்து பாதுகாத்து வைத்து ஆச்சரிய மூட்டுகிறார். புத்தகங்களின் காப்பகத்தை பார்த்து வியந்து பேசிக் கொண்டே இருக்கும் போது வீட்டின் மற்றுமொரு பெரிய அறை யில் உலகில் உள்ள 193 நாடுகளின் கரன்சி நோட்டுகள், நாணயங்கள் என 2 லட்சத்துக்கும் மேல் வைத்துள்ளார். அலமாரிகளின் கோப்புகளில் ஒவ்வொன்றாக பாதுகாப்பாக கசங்காமல் சேகரித்து வைத்துள்ளதோடு, தொடர் வரிசை எண்ணில் உள்ள பணங்கள், இந்திய ரிசர்வ் வங்கியில் இதுவரை கவர்னராக பதவி வகித்தவர்களின் கையெழுத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் சிறப்பு வெளியீடுகள், இந்திய அஞ்சல் துறை  வெளியிட்டுள்ள இந்நாள் வரையிலான அஞ்சல் தலைகள், உறைகள், சிறப்பு  வெளியீடுகள், மணம் வீசும் அஞ்சல்  தலைகள், 102 நாடுகளின் பழமை யான அஞ்சல் தலைகள் என வரலாற்று  சிறப்புமிக்க ஒவ்வொரு பொக்கிஷங்களை யும் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து சேகரித்து வருகிறார். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி, சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் புழக்கத்திலிருந்த நாணயங்கள், மன்னர் கால நாண யங்கள், ஓலைச்சுவடிகள் என பார்ப்பவர் களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் சேக ரித்து வைத்துள்ளார். மேலும் ஒவ்வொன் றை பற்றியும் சிறு குறிப்பையும் அதனு டன் இணைத்து பாதுகாக்கிறார். ஜான்சன்

;