tamilnadu

img

திரிபுராவின் உழைக்கும் மக்களுடன் இணைந்து நிற்போம்!

சிஐடியு அகில இந்திய மாநாடு உறுதி

சிஐடியுவின் 16ஆவது அகில இந்திய மாநாடு திரிபுரா மக்கள் மீதும், குறிப்பாக உழைக்கும் மக்கள் மீதும் நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குத லுக்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. திரிபுராவில் பாஜக - ஐபிஎப்டி கூட்டணி அரசு பதவியேற்ற திலிருந்து, கடந்த 22 மாதங்களாக மாநிலத்தின் ஜனநாயக, இடதுசாரி மனோபாவம் கொண்ட மக்கள் மீதும், இடதுசாரி கள் மீதும் கடுமையான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இடதுசாரி மனோபாவம் கொண்ட 2116 பொது மக்கள் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 285 பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

மொத்தம் 237 சிஐடியு அலுவலகங்கள், இணைப்பு சங்கங்களின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன, தீ வைக்கப்பட்டன அல்லது கைப்பற்றப்பட்டன. 135 சிபிஐ(எம்) அலுவலகங்கள் தீவைக்கப்பட்டன. 320 சிபிஐ(எம்) அலுவலகங்கள் சூறையாடப்பட்டன, 69 அலுவலகங்கள் கைப்பற்றப்பட்டன. இடைத் தேர்தல்களிலிருந்து, பஞ்சாயத்துராஜ் தேர்தல் வரை, உள்ளாட்சித் தேர்தலிலிருந்து பொதுத்தேர்தல் வரை வாக்காளர்கள் தமது வாக்கைச் செலுத்த அனுமதிக்கப்பட வில்லை. வாக்களர்கள் மீறிச் சென்றால் தாக்கப்பட்டனர். 80, 90 வயது மூத்தவர்கள் கூடக் கடுமையாகத் தாக்கப் பட்டனர்.

கடந்த 22 மாதங்களில் 180 வீடுகள் எரிக்கப் பட்டன. 1662 வீடுகள் சூறையாடப்பட்டன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன. 985 வீடுகள் தாக்கப்பட்டன, 180 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 341 கடைகள் சூறை யாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. 52 மீன்பண்ணை கள், கோழிப்பண்ணைகள், ஆட்டுக்கிடைகள் கொள்ளை யடிக்கப்பட்டன, 40 ரப்பர் தோட்டங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன, 16 தீக்கிரையாக்கப்பட்டன. 110 கார்கள் எரிக்கப்பட்டன அல்லது நொறுக்கப்பட்டன. இதுவரை நமது தோழர்கள் 13 பேர் தமது இன்னுயிரை பாஜக குண்டர்களால் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் பெண்கள் மீதான தாக்குதல் பயங்கர நிலைக்குச் சென்றுள்ளது. 86 பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சட்டசபை அமர்வில் கூறியபடி 22 பெண்கள் கும்பல் வன் புணர்வுக்குட்படுத்தப்பட்டனர், பெண்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் எண்ணிக்கை 1715, அவர்கள் வீட்டிலும், வெளியிலும் வன்புணர்வு உள்ளிட்ட அனைத்து வகைக் கொடூரங்களுக்கும் உட்படுத்தப் பட்டனர். பாஜக ஆட்சியில் மாநிலத்தில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. 214 சிறுமிகள் உட்பட 1956 பெண்கள் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இடதுசாரித் தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது ஆயிரக்கணக்கான பொய் வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. ஆளுங்கட்சி குண்டர்களின் மிரட்டலை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு அமைப்புக்களின் ஜனநாயகச் செயல்பாடுகளை முடக்குவதன் மூலம் மாநிலத்தில் எழுந்துள்ள பரவலான வெறுப்பை மிரட்டல் மூலம் அடக்க ஆர்.எஸ்.எஸ்., பாஜக தொண்டர்கள் முயல்கின்றனர்.  இடதுசாரி அரசு அமலாக்கிய பல சாதனைகள், திட்டங்கள் இப்போது அகற்றப்பட்டு விட்டன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான தோழர் பாதல் சவுத்ரி (72) பொய்யான குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். கடந்த 78 நாட்களாக அவர் சிறையில் உள்ளார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்போது கைது செய்யுமளவுக்கு அரசு நிர்வாகம் குரூரமாக நடந்து கொண்டது. தற்போது அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலையில் உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, அவர் எந்த உணவும் கொடுக்கப்படாமல் மனி தாபிமானமற்ற வகையில் மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டார். தோழர் பாதல் சவுத்ரி மீதான மனிதாபி மானமற்ற தாக்குதலுக்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. திரிபுரா அரசு உடனடியாக அவர் மீது சாட்டப் பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டை விலக்கிக் கொள்ள வேண்டு மென்று இந்த மாநாடு கோருகிறது.

இத்தகைய அனைத்து வகையான மிரட்டல்கள், தாக்கு தல்களை எதிர்த்து நாளுக்கு நாள் மக்கள் தெருக்களில் திரண்டு அரசின் பல்வேறு பொருளாதாரத் தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் சிஐடியு அகில இந்திய 16ஆவது மாநாடு போராடும் திரிபுரா மக்களுடன் இணைந்து ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களும், உழைக்கும் மக்களும் நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

;