திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

துணை முதல்வர் முன்னிலையில் அதிமுக - பாஜக நிர்வாகிகள் மோதல்

தேனி:
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் - மாவட்ட ஆட்சியர்முன்னிலையில் அதிமுக, பாஜக நிர்வாகிகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனியில் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று தேனி அருகே 228 ஏக்கர் பரப்பில் ரூ.265கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள கால் நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான மாதிரி வரை படத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பொதுமக்களை சந்தித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனுக்களை பெற்றார். அப்போது, தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மகாராசன் என்ற பாலசுப்பிரமணி, தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மனைவிக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு வந்தார்.அப்போது திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் முடிந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திப்பதற்காக, பாஜகவைச் சேர்ந்த மகாராசன் முயன்றபோது அதிமுகமாவட்ட செயலாளர் சையதுகான் அவரை ஒருமையில் பேசி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக பிரமுகர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.தேனி ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர்,ஆட்சியர் முன்னிலையில் இரு கட்சி நிர்வாகிகள் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

;