தூத்துக்குடி, காரைக்கால், நாகை, கடலூர், எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் இன்று 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தெற்கு வங்கக் கடல் மத்தியப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டது. இது மேலும் வலுப்பெற்று நாளை (செவ்வாய்க்கிழமை) காலை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி, காரைக்கால், நாகை, கடலூர், எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி நகர்வதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.