tamilnadu

img

ஹோமியோ மருந்து வழங்கல்

தூத்துக்குடி, ஜூலை 9 ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் 12 வது வார்டுக்கு உட்பட்ட ஜெகவீர பாண்டிய புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய 12 வது வார்டு கவுன் சிலர் மற்றும் ஹோமியோ பதி மருத்துவர் சங்கம் இணைந்து நடத்திய கொரோ னோ நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30சி வழங்கும் விழா நடைபெற் றது. விழாவிற்கு 12-ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன் சிலர் பு.சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ஏ. பெலி க்ஸ் கிளிப்போர்டு, ஆயிரம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி மருந்தினை வழங்கினார். இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பி.காசிவிசுவநாதன் ,ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் சேகர், வார்டு உறுப்பினர் தன லட்சுமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலா ளர் கே.பி.ஆறுமுகம் ,மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர் ராகவன், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் பா.புவி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.