tamilnadu

img

முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மறைவு

தூத்துக்குடி, ஆக. 6- முன்னாள் திமுக அமைச்சரும், அதிமுக மாநில மீனவர் அணி இணைச் செயலாளருமான ஜெனிபர் சந்திரன் செவ்வாயன்று காலமானார். ஜெனிபர் சந்திரன், திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், மீன்வளத்துறை அமைச்சராகவும் இருந்தவர். பின்னர் அதிமுகவில் இணைந்து பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.