வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி...

தூத்துக்குடி:
ஏரல் அருகே டாஸ்மாக் கடை கதவை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால்பல லட்சம் ரூபாய் தப்பியது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே கொற்கை விலக்கு நாலுமுக்கு சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையில் முக்காணி வடக்கு யாதவர்தெருவை சேர்ந்த மாரியப் பன் (51) என்பவர் சூப்பிர் வைசராக உள்ளார். கடையில் சுப்பிரமணி, சங்கர் ஆகியோர் விற்பனையாளர் களாக உள்ளனர். இவர்கள்3 பேரும் பொங்கலன்று இரவுவியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். இந் நிலையில் கடை விடுமுறை தினத்திற்கு பிறகு மாரியப் பன் உள்ளிட்ட 3 பேரும் கடையை திறக்க வந்தனர். 

அப்போது கடையின் கதவு ஷட்டரில் வெல்டிங் மெஷின் வைத்து துளை போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் மர்மநபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதனால் லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய்தப்பியது. இதுகுறித்த புகாரில் ஏரல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
 

;